மாம்பழ கேசரி
Mango Kesari
தேவையான பொருட்கள்:
ரவை - 250 g
நன்றாக பழுத்த மாம்பழம் - 1
சர்க்கரை - 75 g
ஏலக்காய் - 5
நெய் - 250 ml
முந்திரி - தேவையான அளவு
தண்ணீர் - 750ml
செய்முறை:
மாம்பழத்தின் மேல் தோலை நீக்கி நன்றாக மசித்துக் கொள்ளவும்.சிறிய பாத்திரத்தில் நெய் ஊற்றி உருகியதும் முந்திரியைப் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்.
அதே பாத்திரத்தில் மேலும் சிறிது நெய் ஊற்றி சூடானதும் ரவையைக் கொட்டி பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
அதில் வறுத்த ரவை பாதி அளவு வெந்ததும்,சர்க்கரை மற்றும் மாம்பழத்தைக் கலந்து கேசரி பதம் வரும் வரை கிளறவும்.
பின்பு நெய்யில் வறுத்த முந்திரியை கேசரியின் மேல் தூவி அலங்கரிக்கவும்.சுவையான மாம்பழ கேசரி ready.
 

 
 Hello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean.
Hello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean. 
No comments:
Post a Comment