This blog is containing cooking recipes,simple cooking, cooking tips,beauty care tips. durgainfocard.blogspot.com

class="rambuhijau">Ads Here

Sunday, May 22, 2022

Multani mitti uses in face / Natural Face Pack / முல்தானி மெட்டி முகம் பொலிவு பெற

முல்தானி மெட்டி 

 Multani mitti uses in Face  

Natural Face Pack




முல்தானி மெட்டியை வீட்டிலேயே எளிய முறையில் பயன்படுத்தி முகப்பொலிவை பெற முடியும்.முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைத்து  வயதானதைத் தடுக்கும் அழகு பொருள்.

முல்தானி  மெட்டி சருமத்துக்கு அழகை கொடுக்கக்கூடிய இயற்கையான பொருள்.அழகு நிலையங்களில் முல்தானி மெட்டியை face pack களில் பயன்படுத்தப்படுகிறது.


முகம் பொலிவு பெற:(Skin Brighting)

முல்தானி மெட்டி  -  2 ஸ்பூன்

பன்னீர்  -  2 ஸ்பூன்

இரண்டு பொருள்களையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவ வேண்டும்.30 நிமிடங்கள்  கழித்து கழுவவும்.

இவ்வாறு வாரம் ஒரு முறை செய்வதால் சருமத்தின் இறந்த செல்களை நீக்குகிறது.சருமத்திலுள்ள அழுக்கை நீக்கவும்,சருமத்தின் தரத்தை மேம்படுத்தவும் முல்தானி மெட்டி பயன்படுகிறது.


முகப்பரு நீங்க:

முல்தானி மெட்டி - 2 டீஸ்பூன்

சந்தன பவுடர்  - 2 டீஸ்பூன்

ரோஸ் வாட்டர்  - 1 டீஸ்பூன்

 மூன்றுபொருள்களையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவ வேண்டும்.30 நிமிடங்கள்  கழித்து கழுவவும்.

இதனை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர வேண்டும்.முகப்பருக்கள் குறையும்.வடுக்கள் மறையும்.


சருமம் வெள்ளையாக மாற:(Skin Whitening)

முல்தானி மெட்டி சருமத்தை சிறந்த சுத்தப்படுத்தும் பொருளாக செயல்படுவதால் சரும நிறம் மேம்படும்.

முல்தானி மெட்டி - 2 டீஸ்பூன்

தயிர் - 2 டீஸ்பூன்

இரண்டு பொருள்களையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவ வேண்டும்.20 நிமிடங்கள்  கழித்து கழுவவும்.முகம் பொலிவு பெறும்.



No comments:

Post a Comment