This blog is containing cooking recipes,simple cooking, cooking tips,beauty care tips. durgainfocard.blogspot.com

class="rambuhijau">Ads Here

Wednesday, May 25, 2022

காலிபிளவர் குடை மிளகாய் மிளகு மசாலா / Cauliflower Capscicum Pepper Fry


 காலிபிளவர் குடை மிளகாய் மிளகு மசாலா

Cauliflower Capscicum Pepper Fry



தேவையான பொருட்கள்:

காலிபிளவர் - 1

குடை மிளகாய் - 1

பெரிய வெங்காயம் - 1

இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்

வர மிளகாய் - 1

சீரகம் - 1 ஸ்பூன்

வர மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

கரம் மசாலா - 1 ஸ்பூன்

மிளகு தூள் - 1/2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 3 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

செய்முறை:

வாணொலியில் எண்ணெய் ஊற்றி சீரகம்,வர மிளகாய் போட்டு தாளிக்கவும்.

நறுக்கிய காலிபிளவரை சுடுதண்ணீரியில் 5 நிமிடங்கள் போட்டு வைக்கவும்.

பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பின் மசாலா பொருட்களை சேர்க்கவும்.

மஞ்சள் தூள்,கரம் மசாலா,வர மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.குடை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.



இதனுடன் காலிபிளவர்,உப்பு சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் மூடி போட்டு வேக வைக்கவும்.





அடிக்கடி கிளறி விடவும். சுவையான காலிபிளவர் குடை மிளகாய் மிளகு மசாலா தயார்.




No comments:

Post a Comment