அரிசி ரொட்டி
Rice Roti
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 1
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1/4 ஸ்பூன்
கடலப்பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறதளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போடவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,கடலப்பருப்பு,பொரியவிட்டு நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை,கொத்தமல்லி போட்டு தாளிக்கவும்.
தாளித்தவற்றை அரிசி மாவில் கொட்டி தேவையான அளவு தண்ணீர் உற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைவும்.உருண்டைகளாக பிடிக்கவும்.
சப்பாத்தி கட்டையில் எண்ணெய் தடவி அரிசி மாவு உருண்டைகளை சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்த்து தோசைக்கல்லில் சூடானதும் எண்ணெய் தடவி தேய்த்து வைத்த அரிசி ரொட்டியை போட்டு மிதமான தீயில் சுட்டு எடுக்கவும்.
சுவையான அரிசி ரொட்டி தயார்.
 

 
 Hello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean.
Hello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean. 
No comments:
Post a Comment