Mushroom Pepper Fry
காளான் மிளகு மசாலா
தேவையான பொருட்கள்:
காளான் - 200g
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 1
பட்டை - 1
கிராம்பு - 4
சோம்பு - 1/2 ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 5
எண்ணெய் - 5 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
வர மிளகாய் - 1 ஸ்பூன்
மிளகு தூள் -1 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லி - சிறிதளவு
செய்முறை :
கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு,சோம்பு,பிரியாணி இலை சேர்த்து லேசாக பொரிய விடவும்.
நறுக்கிய வெங்காயம்  போட்டு முக்கால் பாகம் வதக்க வேண்டும்.நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும்.
                    இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
 இரண்டாக நறுக்கிய காளான் சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்.
                 பொடியாக வெட்டிய தக்காளியை சேர்த்து கிளறவும்.
     இதில் மசாலா பொருட்களை சேர்க்க வேண்டும்.கரம் மசாலா,மிளகாய் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும். 
சிறிதளவு தண்ணிர் தெளித்து ஐந்து நிமிடங்கள் முடி போட்டு வேக வைக்க வேண்டும்.
சூடான சுவையான காளான் மிளகு மசாலா தயார்.
 




 
 Hello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean.
Hello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean. 
No comments:
Post a Comment