This blog is containing cooking recipes,simple cooking, cooking tips,beauty care tips. durgainfocard.blogspot.com

class="rambuhijau">Ads Here

Tuesday, May 10, 2022

புடலங்காய் கூட்டு Snake Gourd Gravy

           புடலங்காய் கூட்டு

   Snake Gourd 

Gravy



தேவையான பொருட்கள் :

புடலங்காய் - 250 g

கடலப்பருப்பு - 100g

தேங்காய் - 1 கப்

பச்சைமிளகாய் - 3

பட்டை - 1 துண்டு

தேங்காய் எண்ணெய்  - 2 ஸ்பூன்

கடுகு - 1/2 ஸ்பூன்

கடலப்பருப்பு - 1 ஸ்பூன்

வர மிளகாய்  - 2

மஞ்சள் தூள் - 1/4  ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை

செய்முறை :

கடாயில் தண்ணிர் ஊற்றி கடலப்பருப்பை வேக வைக்கவும்.




கடலப்பருப்பு வெந்தவுடன் பொடியாக நறுக்கிய புடலங்காயை போட்டு வேக விடவும்.உப்பு,மஞ்சள் தூள் சேர்க்கவும்.



மிக்ஸியில் தேங்காய்,பச்சை மிளகாய்,பட்டை, தண்ணிர் சிறிது சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.




புடலங்காய் வெந்தவுடன் மிக்சியில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.




தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, கடலப்பருப்பை போட்டு பொரிந்தவுடன் வரமிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து புடலங்காய் கடலப்பருப்புடன் சேர்க்கவும்.




சுவையான புடலங்காய் கடலப்பருப்பு கூட்டு தயார்.

No comments:

Post a Comment