ஹோட்டல் ஸ்டைல்
உருளைக்கிழங்கு மசாலா
Potato Masala
தேவையான பொருட்கள்:
உருளைக் கிழங்கு - 250 g
பெரிய வெங்காயம் - 3
பச்சைமிளகாய் - 4
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 5 பல்
கடுகு - 1/4 ஸ்பூன்
கடலப்பருப்பு - 2 ஸ்பூன்
கடலமாவு - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறதளவு
எண்ணெய் - 3 ஸ்பூன்
செய்முறை:
குக்கரில் உருளைக் கிழங்கை போட்டு 3 விசில் விட்டு வேக வைக்க வேண்டும்.
கடாயில் எண்ணெய் உற்றி கடுகு போட்டு பொறிந்தவுடன் கடலப்பருப்பை சேர்த்து பொன்னிறம் மாறும் வரை வறுக்கவும்.
அதனுடன் இஞ்சி பூண்டு,பச்சைமிளகாய் இடித்து சேர்த்து வதக்கவும்.நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
200ml தண்ணீர் சேர்த்து வெங்காயம் தண்ணீரில் நன்றாக வேக வைக்கவும்.வெங்காயம் வெந்தவுடன் மஞ்சள் தூள் உருளைக் கிழங்கை பொடித்து சேர்த்து ஒரு கொதி விடவும்.உப்பு சேர்க்கவும்.
ஒரு கொதிவந்தவுடன் கடலமாவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து சேர்க்க வேண்டும். கடலமாவு சேர்க்கும் பொழுது உருளைக் கிழங்கு மசாலா கெட்டியாக இருக்கும்.
சுவையான உருளைக் கிழங்கு மசாலா ரெடி. பூரிக்கு ஏற்ற ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு மசாலா தயார்.
 

 
 Hello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean.
Hello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean. 
No comments:
Post a Comment