This blog is containing cooking recipes,simple cooking, cooking tips,beauty care tips. durgainfocard.blogspot.com

class="rambuhijau">Ads Here

Friday, May 20, 2022

Rose Water benefits for Skin and Hair /ரோஸ் வாட்டர் அழகு குறிப்புகள்

 

Rose Water benefits for Skin and Hair

ரோஸ் வாட்டர்  அழகு குறிப்புகள்





முகம் பொலிவு பெற ரோஸ் வாட்டரை பயன்படுத்துவது எப்படி?

முகத்தில் ரோஸ் வாட்டரை தடவுவதன் மூலம் சரும செல்கள் வலுப்பெறும்.முகம் புத்துணர்ச்சி அடையும்.பொலிவு பெறும்.

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு,ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் இரண்டையும் நன்கு கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவலாம். பின் முல்தானி மிட்டி கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால் முகம் பிரகாசிக்கும்.




ரோஸ் வாட்டரை பஞ்சில் எடுத்து முகம் முழுவதும் துடைக்கும் போது  முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி சுத்தப்படுத்துகிறது.

சருமம் வறட்சியாகவோ அல்லது முகப்பரு  இருந்தாலும் ரோஸ் வாட்டரை தினமும் இரவில் அப்ளை காலை எழுந்ததும் கழுவலாம்.

ரோஸ் வாட்டரை முல்தானி மிட்டியுடன் கலந்து முகத்தில் அப்ளை செய்து வர உடனடி பளபளபபை பெறலாம்.
 
சில துளிகள் தேங்காய் எண்ணெயுடன் ரோஸ் வாட்டர் கலந்து மேக்கப் ரிமூவராக
பயன்படுத்தலாம்.

ரோஸ் வாட்டர்  சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது.

No comments:

Post a Comment