This blog is containing cooking recipes,simple cooking, cooking tips,beauty care tips. durgainfocard.blogspot.com

class="rambuhijau">Ads Here

Saturday, May 21, 2022

Karakozhukatai கார கொழுக்கட்டை

 Karakozhukatai 

கார கொழுக்கட்டை






தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி - 2 கப்

பெரிய வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 4

வரமிளகாய் - 2

தேங்காய் - 1 கப் துருவியது

எண்ணெய் - 5 ஸ்பூன்

உப்பு - தேவைகேற்ப

கறிவேப்பிலை,கொத்தமல்லி 


செய்முறை:

இட்லி அரிசியை மூன்று மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.

அரிசியை மிக்ஸியில் போட்டு சீரகம்,உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலப்பருப்பு,உளுந்தம் பருப்பு தாளிக்கவும்.பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய், கறிவேப்பிலை,வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.

அரைத்து வைத்த அரிசியை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.கடைசியில் துருவிய தேங்காய்,கொத்தமல்லி சேர்க்கவும்.

இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி இட்லி தட்டில் வறுத்த மாவை சிறு உருண்டைகளாக பிடித்து வேக வைக்க வேண்டும்.

சுவையான கொழுக்கட்டை தயார்.

 



No comments:

Post a Comment