This blog is containing cooking recipes,simple cooking, cooking tips,beauty care tips. durgainfocard.blogspot.com

class="rambuhijau">Ads Here

Tuesday, June 7, 2022

Egg Curry / முட்டை மசாலா / Egg Gravy / Egg Masala

        

       Egg Curry / முட்டை மசாலா



தேவையான பொருட்கள்:

முட்டை - 5

பெரிய வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 1

தக்காளி  - 2

இஞ்சி  - 1 துண்டு

பூண்டு  - 5 பல்

பட்டை - 1 

சோம்பு - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

கரம் மசாலா - 1 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 5 ஸ்பூன்


செய்முறை:

              முட்டையை வேக வைத்து கொள்ளவும்.

     மிக்ஸியில் தக்காளி,இஞ்சி,பூண்டு, ஒரு பட்டை, 1 ஸ்பூன் சோம்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். 

    கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,சோம்பு சேர்த்து தாளிக்கவும்.நறுக்கிய பெரிய வெங்காயம்,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை,சேர்த்து வதக்கவும்.அரைத்த தக்காளி விழுதை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.

இதில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கரம் மசாலா சேர்த்து ஒரு கொதி விடவும். உப்பு சேர்க்கவும்.



வேக வைத்த முட்டையை இரண்டாக வெட்டி சேர்க்கவும்.லேசாக கலந்து விட்டு முடி போட்டு ஐந்து நிமிடங்கள் வேக விடவும்.கடைசியில் கொத்தமல்லி தூவி இறக்கவும்.சுவையான முட்டை மசாலா ரெடி.








No comments:

Post a Comment