பளிச் என்ற முகத்திற்கு வீட்டிலேயே பேஸ்பேக் தயாரிக்கலாம்
சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும் சில குறிப்புகள்
தக்காளி பேக்:
2 டீஸ்பூன் தக்காளி சாறுடன்,ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கெட்டியான கலவையாக தயார் செய்யவும்.இந்த முகத்தில் பூசிவிட்டு 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவலாம்.
பயன்கள்:
தக்காளியில் நிறைய உயிர்ச் சத்துக்களும்,வைட்டமின் 'சி' யும் உள்ளன.அதிலுள்ள 'அஸ்கார்பிக் ஆசிட்' எனும் ஆன்டி ஆக்சிடன்ட் சருமத்தின் துளைகளுக்குள் பரவி,சருமத்தை பளபளப்பாக மாற்றுகிறது.
வெள்ளரி மற்றும் பால் பேக்:
ஒரு சிறிய அளவு வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் 50 ml பால் மற்றும் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து,நன்றாக அரைத்துக் கொள்ளவும்.இந்த விழுதை முகத்தில் பூசி 20 முதல் 25 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.
பயன்கள்
வெள்ளரிக்காயின் சாறு சரும பாதிப்புகளை போக்குகிறது.வெயிலால் கருத்த சருமத்தை அதன் இயல்பு நிலைக்கு திரும்பச்செய்கிறது.இந்த பேஸ்பேக் சருமத்துக்கு புத்துணர்ச்சி அளித்து வறட்சி ஏற்படாமல் மென்மையாக வைக்கிறது.
நெல்லிக்காய் தயிர் பேக்:
2 ஸ்பூன் அரைத்த நெல்லிக்காய் விழுதுடன் ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் பூசவும்.இந்த கலவை நன்றாக உலர்ந்ததும் முகத்தை கழுவவும்.
பயன்கள்
நெல்லிக்காய் முகத்தில் கொலாஜின் உற்பத்தியை அதிகரித்து இளமையுடன் வைக்க உதவுகிறது.
சருமத்தின் தளர்ச்சியை அகற்றி அதன் இயல்பான நிலைக்கு மாற்றவும் உதவுகிறது.
 


.jpg)

 
 Hello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean.
Hello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean. 
No comments:
Post a Comment