This blog is containing cooking recipes,simple cooking, cooking tips,beauty care tips. durgainfocard.blogspot.com

class="rambuhijau">Ads Here

Thursday, October 21, 2021

வெங்காயம் உறிப்பதால் ஏன் கண்களிலிருந்து கண்ணீர் வருகிறது ?

                                        வெங்காயம் உறிப்பதால் ஏன்     

                                 கண்களிலிருந்து  கண்ணீர் 

                                                 வருகிறது ?

             



                       வெங்காயத்தை வெட்டும் பொழுது கண்களிலிருந்து கண்ணீர் வருகிறது ஏன்?  ஏனெனில் வெங்காயத்தில் அமினோ ஆஸிட் சல்பாக்சைடு (Amino acid sulfoxide) இருக்கிறது. வெங்காயத்தை வெட்டும் போது வெங்காய செல்லுக்கள் உடையும் போது அமினோ ஆசிட் சல்பாஆக்ஸிடே வெளியேறும், அது ஒரு நொதி (enzyme) உடன் கலந்து ஸின் ப்ரோபனித்தியல் எஸ் ஆக்ஸைடு (Syn-Propanethial-S-Oxide) கிடைக்கும். அது காற்றுடன் கலந்து கண்களுக்குள் வரும். நம் கண்களில் உள்ள ஒரு பொருளுடன் சேர்ந்து லேசான சல்பியூரிக் ஆசிடாக (sulphuric acid) உருவாகும். அதனால் நம் கண்கள் எரியும்.


அதனால் நம் கண்களிலுள்ள லாக்ரிமல் சுரப்பியில் (lacrimal gland) இருந்து ஓர் திரவியம் வெளியேறும். அது நம் கண்களை குளிர வைக்கும். ஒரு கட்டத்தில் அது அதிகமாக வரும். அது கண்களை விட்டு வரும். அது தான் அழுகாச்சி போல் தெரிகிறது.






No comments:

Post a Comment